எம்பத் ஆக இருப்பதினால் வரக்கூடிய இழப்புகள்/ பிரச்சனைகள்.
குழந்தைகள் அம்மா திட்டினாலோ அடித்தாலோ கோபப்பட்டு கொஞ்ச நேரம் பேசாமல் கிட்ட வராமல் இருப்பாங்க .
ஆனால் சிறிது நேரம் கழித்து எதுவும் நடக்காதது போல அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு நடப்பர்.
இந்த எம்பத்தும் அப்படிதான் !.தனக்கு பிடித்தவர்கள் அல்லது யாராவது ஏதாவது சொன்னாலோ, திட்டினாலோ, கிண்டலடித்தாலோ ,காயப்படுத்தினாலோ சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு பின் சகஜ நிலைக்கு மாறிவிடுவர் .
பின்பு சொன்னவங்க கிட்டயே போயி சாப்பிடுவோமா? என்று கேட்பர்.
மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு இழப்புகளும், பிரச்சனைகளும் ஏராளம் வரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக